விவசாயத்துறையில் ரோபோ - ஆராய்ச்சியில் உலக நாடுகள்

0 117

மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு, எதிர்கால விவசாய பொருட்களின் உற்பத்தியை பெருக்க, உலக நாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ரோபோக்களை உருவாக்கி வருகின்றன.

விளை நிலங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விளைவிக்கப்படும் காய், கனிகளை விவசாயிகள் இயந்திர பயன்பாட்டை தவிர்த்து கைகளை பயன்படுத்தி பறித்து வருகின்றனர். இதனால் விவசாய தொழிலாளிகளின் தேவை அதிகரித்து காணப்படுவதோடு, அறுவடை செய்யவும் பல மாதங்களாகிறது.

இதனை போக்க தற்போது உலக நாடுகளை சேர்ந்தவர்கள், விவசாய துறையில் ரோபோக்களை பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பொறியாளர்கள்,‘ லெட்டூஸ்’ என்ற ஒரு வகை கீரைகளை பறிக்க ‘வெஜிபாட்’ எனும் ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் இந்த ரோபோக்கள், தனக்கு ஏற்கனவே ஃபீட் செய்யப்பட்ட புகைப்படங்களுடன் அறுவடைக்கு தயாராக இருக்கும் கீரை இலைகளை ஒப்பிட்டு பார்த்து, அதில் அறுவடைக்கு தாயாரான கீரைகளை கண்டறிகிறது. பின் சென்சார் உதவியுடன் அந்த கருவி குறிப்பிட்ட இடத்துக்கு சென்று, பிளேடு மூலம், கீரை இலைகளை நேர்த்தியாக வெட்டி எடுக்கிறது.

இந்த இயந்திரம் பயனுள்ளதாக இருப்பினும், தொழிலாளிகளை காட்டிலும், தாமதமாக இயங்குவதால் அதனை வேகப்படுத்தும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், 2050ம் ஆண்டு உலக மக்கள் தொகையை கருத்தில் கொண்டு அதற்கு இணையான வேளாண் உற்பத்தியை பெருக்க பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ரோபோக்கள் மற்றும் டிரோன்களை பயன்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.

தற்போது ஸ்டிராபெர்ரி உள்ளிட்ட பழங்களையும் பறிக்க அதிநவீன ரோபோக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது குறைந்த அளவு நீர், பூச்சி மருந்து பயன்படுத்துதல்,மற்றும் குறைந்த கழிவுகளை வெளியேற்றும் நோக்கத்துடன் செயல்படும் ரோபாக்களும் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய ரோபோக்களால் வேளாண் துறையில் விவசாயிகளுக்கான சிரமம் குறைந்து வந்தாலும், இவை பெரிய அளவிலான இயந்திரங்களை போல் இல்லாமல் இலகு ரகத்தை சேர்ந்த இயந்திரம் என்பதால், வெயில், மழை உள்ளிட்ட அனைத்து பருவநிலையிலும் பயனளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments