சென்னையில் இனி கழிவுநீரும் வீணாகாது..!

0 588

தினசரி நாம் பயன்படுத்தி வெளியேற்றும் கழிவுநீரை சுத்திகரித்து நல்ல தண்ணீராக மாற்றி மீண்டும் பயன்பாட்டு வினியோகிக்கும் திட்டம் சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது ..

ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தொகையும், குடியிருப்புகள் , சிறு பெரு நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் என சென்னையில் மட்டும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் லிட்டர் கழிவுநீரை வெளியேற்றுகின்றன. பெரும்பாலும் இந்த கழிவுநீர் அனைத்தும் கால்வாய்கள் வழியாக வீணாக வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் நல்ல தண்ணீராக மாற்றும் மறுசுழற்சி சுத்திகரிப்பு நிலையம் 348 கோடி மதிப்பில் கொடுங்கையூரில் அமைக்கப்பட்டு செயல்பட துவங்கியுள்ளது .

பல்வேறு நிலைகளில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்படும் கழிவுநீர் கசடுகள் நீங்குவதற்காக முதல் மூன்று நாட்களுக்கு வெயிலில் குளம்போல் தேக்கிவைக்கப்படுகிறது.பின்னர் அங்கிருந்து மற்றொரு தொட்டிக்கு மற்றாப்பட்டு குளோரின் கலந்து செரிவூட்டப்படும் . தொடர்ச்சியாக மணல் மற்றும் கூழாங்கற்கள் அடுக்குளால் நிரப்பப்பட்ட தொட்டியில் செலுத்தப்பட்டு இயற்கையாக வடிக்கட்டப்படும் இதன்மூலம் கண்ணுக்குத்தெரியாத கழிவுகள் தொட்டிக்குள்ளேயே தங்கிவிடும்.

பின்னர் இரசாயன நுண்ணிய வடிகட்டி முறையில் மிக நுண் கிருமிகள் நீக்கப்பட்டு அதன்பின் எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையில் நுண்ணிய துகள்கள் மற்றும் நுண்ணுயிர்கள் நீக்கப்பட்டு குடிநீருக்கு இணையான தண்ணீராக மாற்றி வெளியேற்றப்படும்.

இந்த முறைப்படி நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே சுத்திகரிக்கப்படவுள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீரைக் மணலி, மீஞ்சூர் , எண்ணூர் பகுதி நிறுவனங்களுக்கு குழாய் மற்றும் லாரி மூலமாக வினியோகிக்கின்றனர் .

இதே போல் கோயம்பேட்டில் அடுத்த மாதம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட துவங்கும் எனவும் அங்கும் தினசரி 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து ஸ்ரீபெரும்புதூர் வரை உள்ள நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வினியோகிக்க உள்ளனர் . விரைவில், இதே போல் நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் நிலையங்கள் பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்திலும் அமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் தேவைகளுக்கு வினியோகிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் தண்ணீரின் அளவை மேலும் உயர்த்தலாம் எனக்கூறும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் , இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments