தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசிய துணை நடிகர்

0 343

திருச்சி அருகே தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற திரைப்பட துணை நடிகருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்த நிலையில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசி அந்த நடிகர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருச்சி லால்குடியை சேர்ந்த ரமேஷ் என்பவர், டிக்டாக்கியல் நடித்து புகழ்பெற்றவரும், ரஜினிமுருகன், சென்னை - 28, மெர்சல், சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்களில் துணைநடிகராக நடித்தவருமாவார்.

இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது லால்குடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், தலைக்கவசம் அணியாமல் சென்ற ரமேஷுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி நடிகரான அவரை தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதையடுத்து துணைநடிகரான ரமேஷ் போலீசாருடன் நின்றவாறு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசி வீடியோ பதிவு செய்து வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments