சூலூர் விமானப்படை தளத்தில் ராணுவ விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சி

0 186

இந்திய விமானப்படையின் 87வது ஆண்டு விழாவையொட்டி, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் ராணுவ விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்திய விமானப்படையின் 87வது ஆண்டு விழா வரும் அக்டோபர் 8ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி நாடு முழுவதும் உள்ள விமானப்படை தளங்களில், விமானப்படையில் பயன்படுத்தப்படும் பாராசூட்கள், துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளும், விமான கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சூலூர் விமானப்படை தளத்தில் விமானங்களின் கண்காட்சியும், விமானப் படை விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

விமானக் கண்காட்சியில் தேஜஸ், ஏ.என். 32 , எம்.ஐ.17, சாரங் மார்க் 1 உள்பட பல்வேறு ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் விமானத்தில் பயன்படுத்தப்படும் நவீன ரக இயந்திர துப்பாக்கிகள், ஏவுகணைகள், துப்பாக்கி குண்டுகள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதனை பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.

மாணவர்களுக்கு துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments