சுருளி அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

0 198

தேனி மாவட்டம் சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள், அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.

தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுருளி அருவியில் தண்ணீர் கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மேலும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் அதிகாலை முதலே குடும்பத்துடன் வந்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தமிழகம் மட்டும் அல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து அருவியில் குளித்துச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments