தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் துப்புரவாளர் பணியிடத்துக்கு பட்டப்படிப்பு படித்த பலரும் விண்ணப்பம்

0 256

தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் துப்புரவாளர் பணிக்காக விண்ணப்பித்தவர்களிடம் நடைபெற்றுவரும் நேர்காணலில் எம்.டெக். உள்ளிட்ட பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவுப் பணியாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பை கல்வித் தகுதியாக நிர்ணயித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. 18 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் 15 ஆயிரத்து 700 ரூபாய் அடிப்படை ஊதியம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி என்றாலும் எம்.இ., எம்.டெக், எம்.பி.ஏ., பி.இ., பி.டெக்., பி.பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். உள்ளிட்ட பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தகுதியான 4 ஆயிரம் பேரின் பெயர் இணையதளத்தில் வெளியிடப்பட்டு கடந்த 23 ஆம் தேதி முதல் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நேர்காணலும் நடைபெற்று வருகிறது.

ஒரு நாளுக்கு 100 பேர் வீதம் 40 நாட்களுக்கு நடைபெறும் நேர்காணலில் பட்டப்படிப்பு படித்தவர்கள் பெரும்பாலோனார் இடம் பெற்றுள்ளனர். சட்டபேரவை சபாநாயகர் மற்றும் செயலாளர் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளதால் சட்டபேரவை அதிகாரிகள் நேர்காணல் மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments