தமிழக பாஜக தலைவரை அகில இந்திய பாஜக தலைமைதான் தேர்ந்தெடுக்கும் -எச்.ராஜா

0 316

தமிழக பாஜகவின் தலைமை பொறுப்புக்கு வரவேண்டும் என தனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் கிடையாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகம் வாயில் முன்பு செய்தியாளர்களை சந்தித்த  எச்.ராஜா, காஷ்மீரில் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு நாட்டில் தமிழகம் தவிர்த்து எந்தவொரு மாநிலத்திலும் எதிர்ப்பு கிடையாது என்றும், தமிழகத்தில் மட்டும் தான் ”இந்தியாவே காஷ்மீரை விட்டு வெளியேறு” என்று கோஷம் போடும் அளவுக்கு தேசதுரோகிகள் இருக்கின்ற மாநிலமாக இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது என்றும்  கூறினார்.

பாஜக மாநில தலைவர் பதவிக்கு தங்களை நியமிக்க வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழக பாஜக தலைவரை அகில இந்திய பாஜக தலைமை தான் தேர்ந்தெடுக்கும் என்றும், அகில இந்திய தலைமை எடுக்கும்  முடிவுக்கு தமிழக பாஜகவினர் அனைவரும் கட்டுபடுவார்கள் எனவும் கூறினார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி  இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான அதிமுக தான் போட்டியிடுகிறது என்றும், ஆகையால் இரு தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தான் வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments