கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை சரிவு

0 742

ஆந்திரம், கர்நாடகா மாநிலங்களில் இருந்து 120 லாரிகளில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதன் எதிரொலியாக, சென்னை கோயம்பேடு சந்தையில் அதன் விலை கிலோவுக்கு 30 ரூபாய் சரிந்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

அண்மையில் அந்த மாநிலங்களில் பெய்த மழையால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்தது. இதன் விளைவாக,  வெங்காயத்தின் விலை கிலோ 70 ரூபாயாக உயர்ந்தது.

இந்த சூழ்நிலையில், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து நேற்று ஒரே நாளில் கோயம்பேடு சந்தைக்கு 120 லாரிகளில் வெங்காயம் கொண்டுவரப்பட்டது. இதனால்  வெங்காயத்தின் விலை  கிலோவுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

கோயம்பேட்டில் வெங்காயத்தின் தேவையை உணர்ந்து நல்ல விலைக்கு விற்கலாம் என்பதால் அண்டை மாநிலங்களில் இருந்து தற்போது வரத்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் மேலும் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments