ஐ.நா.வில் நடைபெற்ற பருவநிலை உச்சிமாநாட்டில் எதிர்பாராதவிதமாக கலந்துகொண்ட டிரம்ப்

0 206

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நடைபெற்ற பருவநிலை உச்சிமாநாட்டிற்கு எதிர்பாராதவிதமாக திடீரென வந்த அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் பேச்சை உன்னிப்பாகக் கேட்டார்.

ஐ.நா.வில் நேற்று பருவநிலை உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெற்ற அதேநேரத்தில் மதசுதந்திரம் தொடர்பான வேறொரு நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதுகுறித்து பருவநிலை ஆர்வலர்களும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் டிரம்பை விமர்சித்திருந்தனர்.

மனிதர்களின் செயல்பாடுகளால் பருவநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற கோட்பாட்டையே கடந்த காலங்களில் அதிபர் டிரம்ப் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். இது சீனா கிளப்பிவிட்ட புரளி என்று கூட அவர் விமர்சித்தது உண்டு. எனவே அவர் திட்டமிட்டே ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டை புறக்கணிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் இதை மறுத்த டிரம்ப், ஹூஸ்டன் வெள்ளப்பெருக்கு விவகாரத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், பருவநிலை மாற்றத்தில் தாம் அக்கறையாக இருப்பதற்கு அதுவே சான்று என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐ.நா.வில் நேற்று பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்றபோது அங்கு திடீரென வந்த டிரம்ப், 15 நிமிடங்கள் மட்டும் இருந்தார். மாநாட்டில் அவர் எதுவும் பேசவில்லை என்றபோதிலும், பிரதமர் மோடி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் பேச்சுகளை உன்னிப்பாகக் கேட்டுவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments