நோபல் பரிசு நியாயமாக வழங்கப்பட்டால், நான் அதற்கு தகுதியானவன் - டிரம்ப்

0 190

நோபல் பரிசு தமக்கு இன்னும் வழங்கப்படாமல் இருப்பது நியாயமற்றது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைபட்டுக் கொண்டுள்ளார்.

நியூயார்க் நகரில் அவரும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தியா ஆக்கிரமிப்பாளர் போலவும், பாகிஸ்தான் அமைதி விரும்பி என்று பொருள்படும் வகையிலும் நீண்ட முன்னுரையுடன் கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவரை, தமது பதில் மூலம் அதிபர் டிரம்ப் வாயடைக்கச் செய்தார்.

நீங்கள் நினைத்ததை எல்லாம் பேசுகிறீர்கள் என்றும், நீங்கள் கேட்டது கேள்வி அல்ல, நீண்ட அறிக்கை என்றும் அந்த செய்தியாளரை விளாசிய டிரம்ப், இதுபோன்ற செய்தியாளர்களை எங்கு பிடிக்கிறீர்கள் என இம்ரான்கானை நோக்கி கிண்டலாகக் கேட்டார்.

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டால், டிரம்ப் நோபல் பரிசு பெற தகுதியானவர் என மற்றொரு செய்தியாளர் கூறியபோது, நியாயமாக நோபல் பரிசு வழங்கப்பட்டால், தாம் பல விஷயங்களில் அதற்கு தகுதியானவர் என டிரம்ப் வருத்தத்துடன் கூறினார். ஆனால் அப்படி நியாயமாக நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

அதனால்தான் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்துவிட்டனர் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைபட்டுக் கொண்டார். அதிபராகப் பொறுப்பேற்றவுடன் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதாகவும், தனக்கு எதற்காக நோபல் பரிசு வழங்குகிறார்கள் என்றே அவருக்கு தெரியவில்லை என்றும் அதிபர் டிரம்ப் கூறினார். எதற்காக நோபல் பரிசு என்றே தெரியாத இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒபாமாவுடன் தாம் உடன்படுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments