ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.200 கோடியில் நவீன சிகிச்சை மையங்கள்..!

0 159

மக்களின் பயன்பாட்டுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 200 கோடி ரூபாய் செலவில் பல்வேறு நவீன சிகிச்சை மையங்கள் அமைக்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் 28 கோடி ரூபாயில் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மாணவர்களுக்கான தங்கும் விடுதி மற்றும் விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு மையத்தை அமைச்சர்கள் தங்கமணி,எஸ்.பி.வேலுமணி,ஜெயக்குமார், சரோஜா, கடம்பூர் ராஜு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

பின்னர் மருத்துவ கல்லூரியின் ஆண்டு விழாவை அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சியையும் அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தான் கல்லூரியில் படிக்கும் போது வகுப்பறையில் பேப்பரில் செய்த ராக்கெட்டை அதிகமாக பறக்க விட்டு உள்ளதாக கூறினார். அப்போது மாணவர்கள் கரகோஷம் எழுப்பி கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை டெபாசிட் பெற விடாமல் தோற்கடிப்போம் என்றும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வடசென்னை மக்களின் பயன்பாட்டுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பல்வேறு நவீன சிகிச்சை மையங்கள் சுமார் 200 கோடி ரூபாயில் அமைக்க பணிகள் நடந்து வருவதாக கூறினார், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments