ஹெல்மெட் சோதனைக்காக போலீசார் மடக்கியதில் லாரி ஏறி பெண்ணின் கால்கள் நசுங்கிய விவகாரம்

0 407

ஹெல்மெட் சோதனையால், லாரி ஏறி பெண்ணின் கால்கள் நசுங்கிய விவகாரம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள ஜோதிநகர் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்சினி, செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஹெல்மெட் அணியாத அவரை பிடிக்க முயன்றனர்.

அப்போது நிலைதடுமாறிய பிரியதர்சினி கீழே விழுந்த நிலையில், எதிரே வந்த லாரியில் சிக்கி அவரின் இரு கால்கள் நசுங்கின.

இச்சம்பவம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து, மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இச்சம்பவம் தொடர்பாக 3 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments