மழையின் காரணமாக சென்னையின் முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு

0 249

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் கடந்த 4 மாதங்களாக வறண்டு கிடக்கின்றன.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த ஒருவாரமாக கனமழை மற்றும் லேசான மழை பெய்து வருகிறது.

இதனால், நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து, பூண்டி,சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக, 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு தற்போது 322 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு தற்போது 43 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

ஆயிரத்து 81 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 48 மில்லியன் கன அடியாகவும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 10  மில்லியன் கன அடியாகவும் உயர்ந்துள்ளது.

தற்போது , சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்து வருவதினால் விநியோகிக்கும் தண்ணீர் அளவினை அதிகரிக்கும் திட்டம் உள்ளதாக குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments