3ஆவது சர்வதேச திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டார் அமைச்சர் பாண்டியராஜன்

0 156

டெல்லியில் துவங்கியுள்ள சர்வதேச திருக்குறள் மாநாட்டில்  தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டார்.

இருநாட்கள் நடைபெறும் 3ஆவது சர்வதேச திருக்குறள் மாநாடு டெல்லி சாணக்யாபுரியில் அமைந்துள்ள யுனெஸ்கோ அரங்கில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி டெல்லி சென்ற அமைச்சர் பாண்டியராஜன் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.

மாநாட்டில் கலந்துகொண்டபின், மத்திய  மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலைச் சந்திக்கும் அமைச்சர் பாண்டியராஜன் கீழடி அகழ்வாராய்ச்சி, அங்கு அருங்காட்சியகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments