ஆம்பூரில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 2 கொள்ளையர்கள் கைது

0 726

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக இருசக்கர வாகனத் திருட்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆம்பூர் எம்.சி சாலையில் உள்ள கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, இளைஞர்கள் இருவர் திருட முயலும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவிக் கேமராவில் பதிவாகியிருந்தன.

இதனைக் கைப்பற்றிய ஆம்பூர் போலீசார் கொள்ளையர்களை அடையாளம் கண்டு தேடி வந்தனர். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், சிசிடிவிக் காட்சியில் இருந்த கொள்ளையர்கள் இருவரும் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஆம்பூர் நகரம் முழுவதும் காவல்துறை சார்பில் 110 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவற்றின் உதவியால் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோரை விரைந்து கண்டறிய முடிவதாக ஆம்பூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments