காயம் காரணமாக இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறிய தீபக் பூனியா

0 301

உலக மல்யுத்த போட்டி இறுதிச்சுற்றில் இருந்து தீபக் பூனியா காயம் காரணமாக வெள்ளிப்பதக்கத்துடன் வெளியேறினார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 86 கிலோ பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா பங்கேற்றார். காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தீபக் பூனியா, அரையிறுதி போட்டியில் ஸ்விட்சர்லாந்து வீரர் ஸ்டெபன் ரெய்ச்முத்தை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் 8க்கு 2 என்ற புள்ளி கணக்கில் ஸ்விட்சர்லாந்த் வீரரை வீழ்த்தி தீபக் பூனியா வெற்றி பெற்றார். இதையடுத்து இறுதி போட்டிக்கு முன்னேறிய தீபக் பூனியா, இன்று ஈரானை சேர்ந்த ஹசன் யாஸ்தானியை எதிர்கொள்ள இருந்தார்.

இந்த நிலையில் தீபக் பூனியா, தனது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இறுதி சுற்றில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து தீபக் பூனியாவிற்கு வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஜூனியர் பிரிவில் மட்டுமே போட்டியிட்டு வந்த தீபக் பூனியா,  முதலாவதாக பங்கேற்ற சீனியர் பிரிவிலேயே இறுதி போட்டி வரை முன்னேறியதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments