திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும் - வைகோ

0 193

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   வைகோ வெளியிட்ட அறிக்கையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கும் காமராஜர் நகர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவாக அறிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அந்த தொகுதியிலும் திமுக மற்றும் மதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு களப்பணி ஆற்ற வேண்டும் எனவும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments