கட்டுமானம் நடக்கும் இடத்தில் இரும்பு திருடும் இளைஞர்கள்

0 590

சென்னை தரமணியில் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் இருந்து இரும்பு பொருட்களை திருடிய 3 இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கட்டபொம்மன் தெருவில் தனக்கு சொந்தமான இடத்தில் லிங்கதுரை என்பவர் கடை ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் இரவு நேரத்தில் கடையின் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரம், கம்பி, சிமெண்ட், ஜல்லி என கண்ணில் படும்  பொருட்களை எல்லாம் வடமாநில இளைஞர்கள் மூன்று பேர் திருடி 3 சக்கர மிதி வண்டியில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இதை திருடர்களுக்கு தெரியாமல் எதிர்வீட்டில் இருந்தவர் வீடியோ எடுத்துள்ளார். வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் லிங்கதுரை, தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்தநிலையில் வீடியோ மற்றும் அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்களை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை  போலீசார் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments