காப்பகம் ஒன்றுக்கு நன்கொடை கேட்பது போல் நடித்து செல்போன் திருட்டு..!

0 360

அருப்புக்கோட்டையில் மின்சாதன விற்பனையகத்தில் காப்பகத்துக்கு நன்கொடை கேட்பது போல நடித்து செல்போன் திருடியவரை சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

கடைகள், அலுவலகங்களில் செல்போன்களை மேசை மீது வைத்துவிட்டு பணியை பார்ப்பது வழக்கமான ஒன்று. இதை நோட்டமிட்டு மேசை மீது உள்ள செல்போனை லாவகமாக மர்மநபர் திருடிச் செல்லும் நிகழ்வு அருப்புக்கோட்டையில் அடுத்தடுத்து நடந்து வருகிறது.

சத்திய மூர்த்தி மெயின் பஜாரில் உள்ள மின்சாதன விற்பனையகத்தில் காப்பகத்துக்கு நன்கொடை கேட்பது போல் வந்த மர்மநபர், மேசை மீது உள்ள செல்போனை நோட்டுப்புத்தகம் ஒன்றை வைத்து மறைத்து எடுத்துச் சென்றுவிடுகிறார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதே போல் திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள ஜியோ அலுவலகம் மற்றும் ஒரு கடையிலும் செல்போன் திருட்டு நடந்துள்ளது. இந்த திருட்டு நிகழ்வுகள் குறித்து யாரும் புகார் அளிக்காத நிலையிலும் சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருட்டு நடந்ததால் உடனடியாக காவல்துறைக்கு புகார் கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments