சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..!

0 1082

தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனத்தாலும், மேற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியாலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14  மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டிவனம் மற்றும் வத்திராயிருப்பில் தலா 7 சென்டிமீட்டரும், பள்ளிப்பட்டில் 6 சென்டிமீட்டரும், ஆண்டிப்பட்டி, போச்சம்பள்ளி, பென்னாகரத்தில் தலா 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments