தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 665

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம்,திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments