கோஷ்டி பூசல்- பதக்க வாய்ப்பை இழந்த தமிழக வீரர்கள்..!

0 402

கனடா நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் வலு தூக்கும் பிரிவில் போட்டியிடாமல் தமிழக வீரர்கள் 8 பேர் புறக்கணிக்கப்பட்டிருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த கோவிந்தசாமி கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த பல வருடங்களாக இந்தியாவில் நடைபெற்ற வலு தூக்கும் போட்டியில் பங்கேற்று 7 முறை தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

இதனால் இவர் சிறந்த வீர ராக தேர்ந்தெடுக்கப்பட்டு கனடாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் வலுதூக்கும் பிரிவில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதற்கிடையில் தமிழ்நாடு வலு தூக்கும் சங்கத்தில் ஏற்பட்ட பூசல் காரணமாக அந்த சங்கம் தற்போது இரண்டாக பிளவு பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிந்தசாமி உள்பட 8 வீரர்களுக்கு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க விசா கிடைக்காமல் தடை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் போட்டியில் பங்கேற்றிருந்தால் இந்தியாவுக்கு நிச்சயம் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கும் என்றும் அத்தகைய அருமையான வாய்ப்பு கோஷ்டி பூசல் காரணமாக பறி போயிருப்பது வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கும் . எனவே மாநில அரசுகள் தலையிட்டு இரு சங்கங்களையும் ஒன்றிணைத்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் தமிழகத்தின் வலு தூக்கும் வீர ர்கள் இந்தியாவிற்கும்,தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க முடியும் என்பதே விளையாட்டு வீரர்களின் கனவாக உள்ளது. இந்த கனவு மெய்ப்படுமா என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments