தாமிரபரணியில் சிங்கமுக யாழி..! மாணவர்கள் குவிந்தனர்

0 689

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரபரணி ஆற்றில் பாண்டியர் கால சிங்கமுகயாழி அடையாளம் காணப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான மாணவர்கள் பாண்டியர் கால நாகரீகத்தை அறிந்து கொள்ளவும், கண்டு எடுக்கப்பட்ட பண்டைய பொங்கிஷங்களை காணவும் படையெடுத்துவரும் அதிசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள முக்காணியில் நீரின்றி வறண்ட தாமிரபரணி ஆற்றில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், அவற்றை காண்பதற்கு பள்ளி மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர்.

பாண்டிய மன்னர்கள் காலக் கட்டிடகலைக்கு சான்றாக கல்தூண்கள்,முதுமக்கள் தாழிகள்,எலும்புத் துண்டுகள், ஓடுகள், கல்லாலான நங்கூரங்கள் கண்டறியப்பட்டன. அதனைத்தொடர்ந்து சனிக்கிழமை கொற்கை பாண்டிய மன்னர் கால சிங்கமுக யாழி சிற்பம் ஒன்று அடையாளம் காணப்பட்டது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புவி தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் பிரத்தியேக இயந்திரங்கள் கொண்டு வந்து கடந்த இரண்டு நாட்களாக அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறை, நாகரீகம், பண்பாடு, கலைத் திறன் உள்ளிட்டவற்றை கண்டறியும் அளவிற்கு போதிய அடையாளங்கள் அங்கே புதையுண்டு இருக்கின்றதா ? என்பதை காண இந்த ஆய்வை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

பாண்டியர் கால வரலாற்று பொக்கிஷங்களை காண பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் தினமும் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் அங்கு வந்திருந்த ஆறுமுகனேரி கமலாவதி பள்ளி மாணவர்களுக்கு ராமாயண கதையில் வரும் கணையாழியுடன் அனுமன் சிற்பம் பொறிக்கப்பட்ட கல்லின் சிறப்பு குறித்து ஆசிரியர்கள் விளக்கி கூறினர்.

மாணவர்கள் பழைமையான பாண்டியர் கால நாகரீகத்தின் வரலாற்று அடையாளங்களை கண்டு பிரமித்தனர்.

ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அங்கு முறையான அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொல்லியல் துறையினரோ, மாவட்ட நிர்வாகமோ இதுவரை இங்குள்ள பண்டைய கால பொருட்களை பாதுகாக்க எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, ஆற்றில் இருந்து தடையின்றி அள்ளப்பட்ட மணலால் இந்த பொங்கிஷங்கள் வெளியே வந்துள்ளதாகவும், இதன் மதிப்பை உணர்ந்து உள்ளூர் மணல் கொள்ளையர்கள் இவற்றை இரவோடு இரவாக மணல் வண்டியில் எடுத்துப்போட்டு திருடிச்செல்லும் முன்பாக காக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments