இமாச்சலப் பிரதேச ஆப்பிள் பழங்களின் சீசன் துவக்கம்

0 307

அதிக சுவை மிக்க ஆப்பிள் என்று கூறப்படும் இமாச்சல பிரதேச ஆப்பிள் பழங்களின் சீசன் தற்போது துவங்கியுள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இமாச்சல பிரதேச ஆப்பிள்களின் சீசன் காலமாகும்.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாஷிங்டன் ஆப்பிள் உள்ளிட்ட, இறக்குமதி ஆப்பிள் பழங்கள் கிலோ 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், உள்நாட்டிலேயே விளையும் இமாச்சல பிரதேச ஆப்பிள்கள் கிலோ ஒன்றுக்கு 100 முதல் 130 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது இந்த இமாச்சல ஆப்பிள்களின் சீசன் காலம் துவங்கியுள்ளதால், சென்னை கோயம்பேடு பழச்சந்தைக்கு இவ்வகை ஆப்பிள்களின் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் விலையும் குறைந்துள்ளதால், ஆப்பிள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் சீசன் காலம் முடியும் வரை இதே போல் குறைந்த விலையிலேயே இமாச்சல ஆப்பிள்கள் விற்பனையாகும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments