மந்தமான வரவேற்பை பெற்றது ஐபோன் 11..

0 727

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 சீனாவின் சந்தை விற்பனைக்கு வெளியாகியுள்ளது. ஆனால் வரிசைகள் சிறிய அளவிலேயே காணப்பட்டன.

ஆப்பிளின் அதி தீவிர ரசிகர்கள் முந்தைய ஆப்பிள் போன் அறிமுகங்களின் போது நூற்றுக்கணக்கில் பெரும் திரளாக திரண்டிருந்தனர். ஆனால் இம்முறை அந்த கோலாகலம் இல்லை. அண்மைக் காலங்களில் பல புதிய அம்சங்கள் பொருந்திய மலிவு விலை ஹேன்ட் செட்டுகள் சந்தையில் புழங்குவதால் ஆப்பிள் நிறுவனம் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

ஷாங்காய், பெய்ஜிங் நகரங்களில் உள்ள கடைகளில் சிறிய எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களே காணப்பட்டனர். ஆனால், 699 டாலர் முதல் 1099 டாலர் விலையில் ஐ போன்-11 மாடல்களின் இணையவழி விற்பனை அமோகமாக இருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments