நூறு ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது? - நிதின் கட்கரி

0 351

போக்குவரத்து விதி மீறலுக்கு நூறு ருபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி அபராதத் தொகை உயர்த்தியிருப்பதை நியாயப்படுத்தி டெல்லியில் நடைபெற்ற சாலை விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்று பேசிய நிதின் கட்கரி, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாலும், செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவதாலும் ஏற்படக்கூடிய விபத்துகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள் என்றார்.

சட்டத்தின் மீது யாருக்கும் பயமும் இல்லை, மரியாதையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய சட்டம் அறிவித்தபின் ஓட்டுனர் உரிமம் வாங்க கியூவில் நிற்கிறார்கள் என்றும் சாடிய நிதின் கட்கரி, மாநில அரசுகள் விரும்பினால் அபராதத்தை குறைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். 5 லட்சம் விபத்துகளில் இரண்டரை லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணம் அடைவதாகவும், அதில் பெரும்பாலோர் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments