பாகிஸ்தானை புகழ்வது ஏன் என்று சரத்பவாருக்கு மோடி கண்டனம்

0 242

பாகிஸ்தானை புகழ்ந்த சரத்பவாருக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற கூட்டத்தில், மகாராஜா சத்ரபதி சிவாஜியின் வாரிசுகளால் வழங்கப்பட்ட மகுடத்தை அணிந்தபடி பிரதமர் மோடி விரைவில் அறிவிக்கப்பட உள்ள தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்தினார்.

கடந்த காலங்களில் மகாராஷ்ட்ராவில் நிலையற்ற ஆட்சிகளால் மக்கள் நலத்திட்டங்களைப் பெற முடியாமல் போனதாக கூறிய மோடி, ஸ்திரமான ஆட்சியை தந்திருக்கும் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிசுக்கு பாராட்டு தெரிவித்தார். பாகிஸ்தானைப் பெருமைப்படுத்தி பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் மீது மோடி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

பாகிஸ்தானை புகழ்ந்த சரத்பவார் அந்நாட்டு மக்கள் இந்தியர்களை உறவினர்களாக மதிப்பதாக தெரிவித்துள்ளார். பலமுறை தாம் பாகிஸ்தான் போனபோது தம்மை அன்பாக உபசரித்தார்கள் என்றும் பாகிஸ்தான் தமக்கு பிடித்த நாடு என்றும் சரத்பவார் கூறியிருந்தார். இதற்கு மோடியிடமிருந்து கடுமையான பதிலடி வந்தது.

காங்கிரஸ் கட்சியின் குழப்பம் புரிந்துக் கொள்ளக்கூடியது, ஆனால் சரத்பவார் மாதிரியான அனுபவம் மிக்க மூத்த தலைவர்களும் பாகிஸ்தானுக்கு சாதகமாக பேசுகிறார்கள் என்று மோடி விமர்சித்தார். முஸ்லீம் வாக்காளர்களைக் கவருவதற்காக தவறான கருத்துகளை வெளியிடுகிறார்கள் என்றும் மோடி கூறினார். அண்டை நாட்டை நேசிப்பதாக கூறும் சரத் பவாரை சாடிய மோடி, தீவிரவாதத்தின் மையமாக அந்நாடு இருப்பதை உலகமே அறியும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments