விக்ரம் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது எப்படி?

0 505

விக்ரம் விண்கலம் தொடர்பு இழந்தது எப்படி என ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் விண்கலம் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.

இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் விண்கலத்தை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். விக்ரம் விண்கலத்தின் ஆயுள் காலம் 14 நாள்கள் மட்டுமே என்பதால், நாளையுடன் ஆயுள் காலம் முடிவடைய உள்ளது.

எனவே இனி விக்ரம் கலத்தை பயன்படுத்த முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், விக்ரம் விண்கலத்துடனான தொடர்பு இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாக அறிக்கை ஒன்றில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், சிறப்பாக செயல்பட்டு வரும் சந்திரயான்-2 விண்கலம் மூலம் நிலவு குறித்த ஆய்வு தொடரும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments