சுபஸ்ரீ உயிரை பறித்தது அலட்சியமா? லஞ்சமா? ஆடியோவால் புதிய சர்ச்சை..!

0 835

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், அனுமதி பெறாத பேனரை வைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு ஜெயகோபால் தலா 1,000 ரூபாய் லஞ்சம் வழங்கியதாக பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்தில் சிக்கி பலியானார்.

அனுமதியின்றி பேனரை வைத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக்கரணை காவல் உதவி ஆய்வாளரான பாஸ்கர், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஜய் என்பவருடன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், பேனர் வைப்பதற்காக, மாநகராட்சி ஊழியர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியதாக காவல் அதிகாரி குற்றம்சாட்டுவதும், அதை காவல் ஆணையருக்கு அறிக்கையாக அனுப்பவிருப்பதாகவும் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விபத்து நடப்பதற்கு முதல் நாள் அங்கு பேனர் வைக்கப்பட்டதாகவும், அதை அகற்றுவதில் பிரச்சனை ஏற்படவே மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ள வேண்டாம் என கூறியதாக உரையாடலில் பேசுபவர் கூறுகிறார்

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசாரும், பள்ளிக்கரணை போலீசாரும் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கினை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதிகள் கூறியிருப்பதால் போலீசார் விசாரணையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டது மட்டுமல்லாமல், அனுமதியின்றி பேனர் வைத்தது தெரிந்தும் அதை கண்டுகொள்ளாமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்திருப்பது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments