GST வரி குறைப்பு தொடர்பாக ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்துவோம் -அமைச்சர்

0 189

தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் 34 பொருட்களுக்கு GST வரி குறைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும்  64 பொருட்களுக்கு வரி குறைப்பு தொடர்பாக ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்துவோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் 37வது ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்கவுள்ளார். கோவா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டுக்கு ஒருமொழி தேவை எனக்கூறும் நடிகர் ரஜினி அது எந்த மொழி என்பது குறித்து விளக்க வேண்டும் என்றும், அதிமுகவை பொறுத்தவரை தமிழ்மொழியை நாடு முழுவதும் பொதுமொழியாக மாற்றினால் மகிழ்ச்சியடைவோம் எனவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments