தமிழகத்தில் 4399 இடங்கள் மழையால் பாதிக்கப்படுமென கணிப்பு..!

0 286

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 4,399 இடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு, மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவ மழையால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்துக்கு நல்ல மழை கிடைக்கும் என்றார். மேலும் இந்த காலங்களில் தான் பாதிப்பு இருக்கும் என்ற அவர், கஜா புயலின்போது மனித உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு சவாலாக எடுத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றியது என்றார்.

இதேபோல் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் முன் எச்சரிக்கையாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். புயலால் பாதிக்கும் பகுதிகளை 4 வகைகளாக பிரித்து கணக்கீடு செய்யப்பட்டு வருதாக அவர் குறிப்பிட்டார்.

வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் 4399 இடங்கள் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்படும் இடங்களில் வசிப்பவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். '

மேலும் நிவாரண முகாம்கள், மருத்துவ முகாம்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உதயகுமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments