எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 5 மீனவர்கள் கைது

0 257

எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை அக்டோபர் 3 ம் தேதிவரை சிறையிலடைக்க  இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெதாபட்டிணத்தில் இருந்து விஜயேந்திரன்,ராமு,சின்னையன்,ஜேசு உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் விசைப்படகில் நடுக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 5 மீனவர்களையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ஊர்காவல்துறை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன் மீனவர்களை வரும் அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 5 பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments