காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்கள் முதல்வரிடம் வாழ்த்து

0 199

சீனாவில் நடைபெற்ற காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல் துறையினர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சீனாவில் 77 நாடுகளின் காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் கலந்துகொண்ட உலக காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 9 தங்கம், 16 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்ற காவல்துறையினர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சென்னை மயிலாப்பூரில் 288 காவலர் குடியிருப்புகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 162 காவலர் குடியிருப்புகள், 3 காவல்நிலையங்கள், 2 காவல்துறை இதர கட்டிடங்கள், 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய கட்டிடங்கள், அந்தத் துறையினருக்கான 13 குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 8 பேருக்கு அவர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் வேலூர் மாவட்டம் பாச்சூர் கிராமத்தில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள 2 சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலூர், மதுரை, நெல்லை மாவட்டங்களில் 11 சேமிப்புக் கிடங்குகளை திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments