காணொலிக் காட்சி மூலம் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்

0 276

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தார்.

சென்னை மயிலாப்பூரில் 288 காவலர் குடியிருப்புகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 162 காவலர் குடியிருப்புகள், 3 காவல்நிலையங்கள், 2 காவல்துறை இதர கட்டிடங்கள், 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய கட்டிடங்கள், அந்தத் துறையினருக்கான 13 குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் வேலூர் மாவட்டம் பாச்சூர் கிராமத்தில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள 2 சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலூர், மதுரை, நெல்லை மாவட்டங்களில் 11 சேமிப்புக் கிடங்குகளை திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments