மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு

0 445

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

டெல்லி சென்று மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, புதன்கிழமை பிரதமர் மோடியை,  அவரது இல்லத்தில் மம்தா சந்தித்து பேசினார். அப்போது மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, பங்க்ளா என்று மாற்றுவது குறித்து மம்தா பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் உள்துறை அமைச்சக அலுவலகத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும், ஆலோசித்ததாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments