ஆசிரியர்களே வராத உண்டு உறைவிட பள்ளி

0 281

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 மாணவர்களுடன் மட்டுமே இயங்கும் பழங்குடியினர் அரசு உண்டு உறைவிட பள்ளிக்கு, ஆசிரியர்கள் வராதநிலை இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை கீழ்சிலம்படி கிராமத்தில் அரசு சார்பில் பழங்குடியினருக்கான இலவச உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகின்றது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இங்கு மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 35 என வருகை பதிவேட்டில் உள்ளது. ஆனால் 9 பேர் மட்டுமே பள்ளிக்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாடம் நடத்த ஒரு ஆசிரியர் கூட வராத நிலையில், ஒரே ஒரு சமையலர் மட்டும் மதிய உணவு சமைத்து வழங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் உணவு, உடை அனைத்தையும் அரசு இலவசமாக வழங்கி வருவதுடன், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பாசிரியர், இரு சமையலர், ஒரு காவலர், ஒரு துப்புரவு பணியாளர் என 6 பேருக்கு மாத சம்பளமாக மொத்தம் ரூபாய் 2 லட்சம் செலவிடுகின்றது. ஆனால் இங்கு ஆசிரியர் யாரும் வராததால் பிள்ளைகள், எழுதப்படிக்க தெரியாமல் தவிப்பதாகவும், பக்கத்து கிராமமான புலியுரில் உள்ள பட்டதாரி ஆசிரியரை தற்காலிகமாக நியமித்து 4 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில் வகுப்பு எடுப்பதாகவும், மற்ற ஆசியர்கள் பள்ளி பக்கம் வராமல், மாத சம்பளத்தை மட்டும் வங்கியில் எடுத்து சென்றுவிடுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

எனவே மாணவர்களின் எதிர்காலம் கருதி போதுமான ஆசிரியர்கள் பள்ளி பகுதியிலேயே தங்கி பாடம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments