மோடியுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது- மம்தா

0 481

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற மோடியை மம்தா பானர்ஜி இதுவரை நேரில் சென்று சந்திக்காமலேயே இருந்துவந்தார். அரசியல் காரணங்களால் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில்கூட மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற மம்தா, அங்கு மோடியைச் சந்தித்து பேசினார். மோடிக்கு பரிசளிப்பதற்காக இனிப்பு மற்றும் குர்தாவையும் அவர் உடன் எடுத்துச் சென்றிருந்தார்.

பின்னர் சந்திப்பு குறித்து கூறிய மம்தா, பிரதமருடனான சந்திப்பு திருப்திகரமானதாகவும், பயனுள்ள வகையிலும் அமைந்ததாக  தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் தொடங்கப்படவுள்ள உலகிலேயே இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கத்தை திறந்துவைக்க மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறிய மம்தா, மேற்கு வங்கத்தின் பெயரை பங்ளா என மாற்றுவது தொடர்பாகவும் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார்.

முன்னதாக டெல்லி செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையம் வந்த மம்தா, அங்கு விமானத்திற்காக காத்திருந்த மோடியின் மனைவி யசோதாபென்னை சந்தித்து புடவையை பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments