ஒரு ரூபாய் கூட இல்லை என வறுமையில் வாடும் தேசிய விருதுகளை பெற்ற மூத்த இசையமைப்பாளர்..!

0 533

தேசிய விருதுகளைபெற்ற இசையமைப்பாளர் வன்ராஜ் பாட்டியா, தமது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லை என்றும் தாம் முதிய வயதில் பணத்துக்காக மிகவும் சிரமப்படுவதாகவும் அண்மையில் பேட்டியளித்துள்ளார்.

இதனை அறிந்த நடிகர் கபீர் பேடி வன்ராஜ் பாட்டியாவை நேரில் சந்தித்து பெருமை மிக்க கலைஞருக்கு உதவும்படி பாலிவுட் நட்சத்திரங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நினைவு தவறுதல், மூட்டு வலி, காது கேளாத நிலை போன்ற பல்வேறு முதுமை சார்ந்த நோய்களால் வன்ராஜ் பாட்டியா ஒரே ஒரு பணியாளின் துணையுடன் முதுமையை தனிமையில் கழிப்பதாகவும் கபீர் பேடி தெரிவித்துள்ளார்.

ஷியாம் பெனகல், அபர்ணா சென், குந்தன் ஷா போன்ற பெருமை மிக்க இயக்குனர்களின் புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த வன்ராஜ் பாட்டியா, லிரில் சோப் விளம்பரத்தில் வரும் லலலலலா என்ற jingle இசை மூலமும் பெரும் புகழ் பெற்றவர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments