நவ.7-ந் தேதிக்குள் அயோத்தி தீர்ப்பு?

0 351

சர்ச்சைக்குரிய ராமர் ஜென்ம பூமி -பாபர் மசூதி அமைந்துள்ள 2 புள்ளி 77 ஏக்கர் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாதங்களை நிறைவு செய்வதற்கான தேதியை அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்து மற்றும் முஸ்லீம் மனுதாரர்கள் தங்கள் வாதங்களை முடிக்க விரும்பும் தேதியை தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.25 நாட்களாக இருதரப்பு வாதப்பிரதிவாதங்கள் அனல் பறக்க, அயோத்தி வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் இடம் பெற்றுள்ள நிலையில் அவர் நவம்பர் 7ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

தமது காலத்திற்குள் தீர்ப்பை வெளியிட வேண்டும் என்று ரஞ்சன் கோகய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஒருவேளை தீர்ப்பு தள்ளிப்போகும் நிலையில், தமது ஓய்வுக்குப் பின்னர் வழக்கை விசாரிக்க புதிய அரசியல் சாசன அமர்வை ரஞ்சன் கோகய் உருவாக்க வேண்டியிருக்கும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments