துரோகம் செய்த நண்பன்.. நெஞ்சை பிளந்து நரபலி..! அறுத்து வீசப்பட்ட தலை

0 879

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே நட்புக்கு துரோகம் செய்த நண்பனை கழுத்தை அறுத்தும், உடலை கிழித்தும் குடும்பத்துக்காக நரபலியிட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்  நடந்துள்ளது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ததால் நிகழ்ந்த கொடூர சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் நாட்டா கவுண்டன் புதூர் அருகே தலை துண்டான நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. மார்ப்பில் இருந்து அடிவயிறு வரை கிழித்து கொல்லப்பட்ட அந்த நபர் யார் என்று காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர்.

அவரது கையில் புனிதா, கவிதா என இரு பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்தது. அதில் கவிதா என்ற பெயரில் தா என்கிற எழுத்து மட்டும் தீயில் கருக்கப்பட்டிருந்தது. இதனை வைத்து அவர் குமாரப்பாளையத்தை சேர்ந்த தறி தொழிலாளி சின்ராஜ் என்றும், 1993 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

கொல்லப்பட்ட சின்ராஜ், கடந்த 20 நாட்களுக்கு முன்பு கூட்டாளியான கூள குமார் என்பவரிடம் தகராறு செய்தது தெரியவந்தது. கூளகுமாரை பிடித்து விசாரித்த போது சின்ராஜ் கொலை சம்பவத்தின் திகில் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. கூளகுமாரும், சின்ராஜும் கடந்த சில மாதங்களாக நண்பர்களாக இருந்துள்ளனர். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது, எப்போதும் ஒன்றாகவே சுற்றுவது என்று இருந்துள்ளனர்.

ஒரு நாள் மதிய விருந்துக்கு சின்ராஜை, கூளகுமார் தனது அண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளான், அங்கு உணவு பரிமாறிய போது அண்ணன் மனைவியுடன் பேசிய சின்ராஜ் எதார்த்தமாக பேசி அவரது செல்போன் நம்பரை வாங்கியுள்ளான்.

கூளகுமாரின் அண்ணியிடம் செல்போனில் பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சின்ராஜ், வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் சென்று வருவதை வாடிக்கையாக்கி உள்ளான் . ஒரு கட்டத்தில் கூளகுமாரின் அண்ணன் மனைவியை மயக்கி காதல் வலையில் விழவைத்த சின்ராஜின் துரோகத்தால் கூளகுமாரின் அண்ணன் குடும்பத்தில் விரிசல் உருவானது.

சில வாரங்களுக்கு முன்பு கூளகுமாரின் அண்ணனை பிரிந்து அண்ணி தனியாக சென்று விட்டதால் அவர்களது குடும்பம் நிம்மதி இழந்தது. இதனால் உறவினர்கள் பலரும் கூட்டளியை வீட்டிற்கு கூட்டிவந்த கூளகுமாரை திட்டியுள்ளனர். நட்பாக பழகி துரோகம் செய்த சின்ராஜிடம் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக இது பற்றி கேட்டு தகராறு செய்துள்ளான் கூளகுமார்.

அப்போது இருவரும் கத்தியுடன் மோதிக் கொண்டதாக கூறப்படுகின்றது. போதையில் சண்டையிட்ட நிலையில் கூளகுமாருக்கு கத்தி குத்தி கைகிழிந்தது. இதற்கு பழிவாங்கும் விதமாகவும், குடும்பத்தை பிரித்து வாழ்வில் நிம்மதி இழக்க செய்ததற்காகவும் சின்ராஜை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய கூளகுமார் கோவில்களில் ஆடு பலியிடுவதை போல, கூட்டாளியை பலியிட முடிவு செய்துள்ளான்.

சம்பவத்தன்று மாலை சமய சங்கிலி பகுதிக்கு சின்ராஜிடம் நட்பாக பேசி, மது அருந்த அழைத்து சென்றுள்ளான். போதை தலைகேறிய நிலையில் சின்ராஜின் மார்ப்பில் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், ஆத்திரம் அடங்காததால், அவனது தலையை துண்டாக அருத்து பாலித்தீன் பை ஒன்றில் கல்லைகட்டி காவிரி ஆற்றுக்குள் வீசியதாகவும், உடலை நரபலியிடுவது போல இரண்டாக கிழித்து மிக கொடூரமாக கொலை செய்துள்ளான் கூளகுமார் என்கின்றனர் காவல்துறையினர்.

உடலை கிழித்து வெளியில் எடுத்த உடல் பாகங்களை எல்லாம் மீண்டும் உடலுக்குள் அள்ளி போட்டு கயிற்றால் கட்டி சடலத்தை மீன்களுக்கு இரையாக்க ஆற்றுக்குள் வீசி ஆத்திரத்தை தீர்த்துகொண்டதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளான் கூளகுமார்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள் அந்தவகையில் கெட்ட நண்பர்களை வீட்டுக்கு அழைத்து சென்று விருந்து வைத்தால் என்ன மாதிரியான விபரீதங்கள் நிகழும் என்பதற்கும், நண்பனுக்கு துரோகம் செய்தால் இறுதியில் என்ன நடக்கும் என்பதற்கும் இந்த கொடூர சம்பவமே சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments