சிறுசேமிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி

0 247

சிறுசேமிப்பு என்ற பெயரில் கிராமப்புற மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு சொத்து சேர்த்த நிதி நிறுவன அதிபர், நீதிமன்றம் வராமல் ஏமாற்றியதால், பொதுமக்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மாத்ரு பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் சிறு சேமிப்பு நிதி நிறுவனத்தை 2006-ல் வேலூர், திருவண்ணாமலை, சிவகாசி என பல்வேறு ஊர்களிலும் கிளைகளை தொடங்கியுள்ளார். கிராமப்புற மக்களிடம் மாதம் 200 ருபாய் வீதம் கட்டினால், 5 வருட முடிவில் ரூபாய் 12 ஆயிரத்துடன் 5 ஆயிரம் சேர்த்து 17 ஆயிரம் ரூபாய் தருவதாக கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த நிதி நிறுவனத்தில் 500க்கு மேற்பட்ட ஏஜென்டுகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த ஏஜென்ட்களை சந்தோஷப்படுத்த நட்சத்திர விடுதியில் விருந்து, பரிசு என கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்உற்சாகமான ஏஜென்ட்கள் 1000க்கும் மேற்பட்ட மக்களை நிதி நிறுவனத்தில் உறுப்பினராக சேர்த்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலில் ஈடுபட்டுள்ளார்.

தவறாமல் பணம் கட்டிய மக்கள், முதிர்வு தொகை கிடைக்காததால், ஏஜெண்டுகள் மூலம் நெருக்கடி கொடுத்ததையடுத்து, ராமச்சந்திரன் தலைமறைவாகி விட்டதாகவும், மதுரையில் பங்களா, மனைவி மற்றும் மகன் பெயரில் 100 ஏக்கர் நிலம் என வாங்கி குவித்துள்ளதுடன், பல நிறுவனங்கள் நடத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பணம் தருவதாக கூறிய அவர், சொன்னபடி வராததால், அங்கு குவிந்து இருந்த 300 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளிக்கச்சொன்னதை அடுத்து அனைவரும் புகார் அளித்தனர். அதன்பேரில் நீதிமன்றம் மூலம் வாரண்டு பிறப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments