அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்

0 429

ராகுல்காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கட்சியின் சிறப்பு கூட்டத்திற்கு பிறகு, அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல்காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் எனக் கேட்ட கே.எஸ்.அழகிரி, தொலைக்காட்சி விவாதத்தில் அமைச்சர் பேசியபோது சுயநினைவுடன் தான் இருந்தாரா எனத் தெரியவில்லை என்றார்.

ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் யாரும் செய்தியாளர்களிடம் பேசியதே இல்லை, ஆனால் இப்போது பேசுகிறார்கள் என்பதாகவும் கே.எஸ்.அழகிரி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments