இடஒதுக்கீட்டால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறிவிடும் என்பது தவறு - நிதின் கட்காரி

0 238

இடஒதுக்கீட்டால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறிவிடும் என்று கருதுவது தவறு என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் சாதி அடிப்படையில் கட்சியில் இடஒதுக்கீடு தந்து தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலி சமூகத்தினர் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், பின்தங்கிய சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடு அவசியம் என்றாலும் அது மட்டுமே அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

கல்வி, சமூக மற்றும் பொருளாதார வழிமுறைகள் மூலமே ஒரு சமூகம் முன்னேற்றம் அடையமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எல்லா சாதி மக்களின் ஆதரவோடும்தான் தற்போது ராஜஸ்தான் முதலமைச்சராக இருக்கும் அசோக் கெலாட் ஆட்சி அமைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தானும் கூறிவந்ததாகவும் ஆனால், இந்திரா காந்தி, வசுந்தர ராஜே, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் எப்படி இட ஒதுக்கீடு இல்லாமல் முன்னேறினர் என்ற கேள்வி எப்போதும் தனக்குள் இருக்கும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments