உயிரிழப்பு ஏற்படுத்திய பேனர் வழக்கில் முன்னாள் கவுன்சிலர் மீது புதிய பிரிவில் வழக்கு

0 307

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் சாலையில், கடந்த 12 ஆம் தேதி திருமண வரவேற்பு பேனர் அறுந்து, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்ததில், அவர் நிலைதடுமாறியதால், பின்னாள் வந்த தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுனர் மனோஜ் யாதவ் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல், அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜெயகோபால் மற்றும் பேனருக்கு பயன்படுத்தும் இரும்பு சட்டத்தை வாடகைக்கு விட்ட அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாதபடி கொலையாகாத மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments