கோதாவரி ஆற்றில் விபத்துக்குள்ளான படகு 200 அடி ஆழத்தில் மூழ்கியிருப்பது கண்டுபிடிப்பு

0 164

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ள நிலையில், விபத்துக்குள்ளான படகு 200 அடி ஆழத்தில் மூழ்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப்பயணிகள் சென்ற படகு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவிப்பட்டிணம் அடுத்த கச்சனூர் என்ற இடத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆற்றில் அதிகளவில் நீர் சென்றதாலும், திடீரென ஏற்பட்ட நீரின் சுழற்சியாலும் கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

படகில் 70க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், முதற்கட்டமாக 12 பேர் பலியானதாகவும், 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த மேலும் 13 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

இதையடுத்து படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே விபத்துக்குள்ளான படகு 48 மணி நேரத்திற்கு பிறகு, கச்சலூர் பகுதியில் ஆற்றின் 200 அடி ஆழத்தில் சென்சார்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் படகை மேலே கொண்டு வருவது மிகவும் சிரமமான காரியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments