தமிழ் மொழியை பயன்படுத்தி அரசியல் செய்பவர்களே நன்றி கெட்டவர்கள்

0 272

தமிழ் மொழியை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்பவர்களை தான் நன்றி கெட்ட தமிழர்கள் என விமர்சித்ததாக பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ.கவினர் கொண்டாடத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பிரதமர் மோடி நலமுடன் வாழ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் சிறப்பு ரத்த தான முகாமை பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒட்டுமொத்த தமிழர்களையும் நன்றி கெட்ட தமிழர்கள் எனக்கூறவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments