தகுதிநீக்கப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்

0 199

தகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தான கவுடர் விலகியதையடுத்து வழக்குவிசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடகாவில் மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, கொறடா பிறப்பித்த உத்தரவை மீறியதாக கூறி இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமாரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நீதிபதி ரமணா தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, மோகன் சந்தானகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான நீதிபதி மோகன் சந்தானகவுடர், வழக்கை விசாரிக்க மனசாட்சி அனுமதிக்கவில்லை என்று கூறி திடீரென விலகி உள்ளார். சந்தான கவுடர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிபதி சந்தான கவுடரை தொடர்ந்து இருக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் சிறிய கலந்துரையாடலுக்கு பிறகு நீதிபதி மோகன் சந்தானகவுடர் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் அதை ஏற்றுகொள்வதாக நீதிபதி ரமணா அறிவித்தார்.

இதை தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி வலியுறுத்தலின் பேரில், மற்றொரு நீதிபதிகள் அமர்வு வரும் 23 ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்கும் என்று கூறி ஒத்திவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments