2-ஜி வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம்

0 1035

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு உள்ளிட்ட, 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிறப்பு நீதிபதி ஓபி சைனி அமர்வில் இருந்து, சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் அமர்வுக்கு மாறுகிறது.

2ஜி ஊழல் வழக்கில் இருந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்களை விடுவித்து கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து.

இந்த தீர்ப்பினை அளித்தவர் நீதிபதி ஓ.பி.சைனி. இதேபோல, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை விடுவித்தவரும் நீதிபதி ஓ.பி.சைனிதான். மேலும், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு, நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5ஆம் தேதி முன்ஜாமீன் வழங்கினார்.

இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து ஒத்திவைக்கக் கோருவதால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பதாக கடந்த 6ஆம் தேதி நீதிபதி ஓ.பி.சைனி அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த மாத இறுதியில் நீதிபதி ஓ.பி.சைனி ஓய்வுபெற உள்ளார்.

இதையடுத்து, ஓ.பி.சைனி விசாரித்து வந்த 2ஜி முறைகேடு தொடர்பான வழக்குகளை, சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் விசாரிப்பார் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு எதிரான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு, காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு எதிரான சுனந்தா புஷ்கர் வழக்கு ஆகியவற்றை ஏற்கெனவே நீதிபதி அஜய்குமார் குஹார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments