விரைவில் தமிழகம் முழுவதும் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர்

0 293

தமிழகம் முழுவதும் 820 மின்சார பேரூந்துகள் இன்னும் ஓர் ஆண்டுக்குள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கார் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்திலுள்ள சின்னமுத்தூர் தடுப்பணையை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நிகழ்வுக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மின்சார பேரூந்துகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகரங்களிலும் விரைவில் 520 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசு ஆயிரத்து 97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான அரசாணையும் வெளியிட்டிருப்பதாகவும், இந்த வாரத்திற்குள் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments