ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மனுகூறு-செகந்திராபாத் விரைவு ரயிலில் தீவிபத்து..!

0 123

தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி அருகே மனுகூறு-செகந்திராபாத் அதிவிரைவு ரயிலில் திடீரென தீப்பற்றியதால் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

கொத்தகூடம் ரயில் நிலையத்துக்கு அதிகாலை ஒரு மணிக்கு வந்த மனுகூறு-செகந்திராபாத் அதிவிரைவு ரயிலில் ஏ1, ஏ2, பி1 ஆகிய பெட்டிகளில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

மூன்று பெட்டிகளில் தீப்பற்றியதாலும் அதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தாலும் அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ஓடினர். சிலர் ரயில் கண்ணாடிகளை உடைத்தும் வெளியேறினர்.

ரயில் நிலைய ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து மின்கசிவை சரி செய்தனர். தீ விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments